பூச்சோங் , 13/09/2024 : கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உறுப்பினரை கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என மைபிபிபியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா கட்சி உறுப்பினர்களை கேட்டு கொண்டார்.
இன்று 12/09/2024 சிலாங்கூர் மாநில மைபிபிபியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற நல்லெண்ண விருந்து நிகழ்வில் மைபிபிபியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா அவர்கள் இக்கோரிக்கையை விடுத்தார்.
கட்சியின் எதிர்கால திட்டங்களை செவ்வன செயல் படுத்தவும் கட்சியை மேலும் வலுப்படுத்தவும் இச்செயல் திட்டம் உதவும் என கூறினார்.
அனைத்து இனத்தவர்களுக்கும் சமமான கல்வி பயிலும் வாய்ப்புகள் கிடைக்க வழி செய்வது
மைபிபிபியின் எதிர்காலத் திட்டங்களில் முக்கியமானதாக இருக்கும்.அதே வேளையில் மக்களின் தேவை கருதி விலைவாசியை கட்டுப்படுத்த அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம்”எனவும் டத்தோ லோக பாலா கூறினார்.
மதானி அரசாங்கத்தின் ” தொழிற்கல்வியின் வழி முன்னேறுவோம்” எனும் கோட்பாட்டிற்கேற்ப மைபிபிபியின் இளைஞர் பிரிவு KnowSkills TVET கல்லூரியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் 12/09/2024 செய்துள்ளது. இதன் வழி தொழிற்கல்வி பயில விரும்பும் மைபிபிபியின் உறுப்பினர்களுக்கு 50 சதவிகிதம் கட்டண சலுகை வழங்கப்படும் என தலைவர் கூறினார்.