“மலேசிய மக்களின் பாரம்பரிய நடனப் போட்டி 2.0” இறுதிச் சுற்று

“மலேசிய மக்களின் பாரம்பரிய நடனப் போட்டி 2.0” இறுதிச் சுற்று

கெடா சிவாஜி கலை மன்றம் மற்றும் சாய் நந்தினி மூவி வோர்ல்ட் இணைந்து ஏற்பாட்டில் கெடா மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான “மலேசிய மக்களின் பாரம்பரிய நடனப் போட்டி 2.0” இறுதிச் சுற்று எதிர்வருகின்ற 13/09/2024 அன்று சுங்கைப் பட்டாணியில் உள்ள மகாத்மா காந்தி மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. சுற்றுலா, கலை கலாச்சார அமைச்சகம் ( MOTAC) மற்றும் மலேசிய சுற்றுலாத்துறையின் (Tourism Malaysia) இணை ஆதரவில் இப்போட்டி நடைபெறும்.

கெடா மாநிலத்தை சேர்ந்த 13 தமிழ்ப் பள்ளிகள் கலந்து கொண்ட தேர்வுச் சுற்று கடந்த 23/08/2024 அன்று தாமான் கெளாடியில் உள்ள மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. தேர்வுச் சுற்றில் கலந்த கொண்ட பள்ளிகளில் இருந்து சுமார் 11 பள்ளிகளின் நடனக் குழுக்கள் 13/09/2024 அன்று நடைபெற இருக்கும் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளன.

டாக்டர் லட்ச பிரபு தலைமையில், டாக்டர் மதியழகனின் வழிகாட்டுதலில் திரு. விக்னேஷ் பிரபு ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த நடனப் போட்டி நமது நாட்டின் கலை கலாச்சார சிறப்புகள் மற்றும் ஒற்றுமையை பரைசாற்றும்.

இறுதிப் போட்டிக்கு திரு. மாஸ்டர் ஜி, திரு, எம்.ஜே. தேவா, திரு. பாலன், திருமதி மலையரசி, திருமதி ஜிசிந்தா ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியாளர்களின் திறமைகளை கணித்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

இறுதிப் போட்டியன்று டத்தோ எம். அசோகன் தேசிய ம.இ.காவின் உதவி தலைவர், சுற்றுலா, கலை கலாச்சார அமைச்சகத்தின் தேசிய கலாச்சாரம் மற்றும் கலைத்துறை (JKKN MOTAC) நிர்வாக அதிகாரி மற்றும் சுற்றுலா, கலை கலாச்சார அமைச்சகத்தின் தேசிய கலாச்சாரம் மற்றும் கலைத்துறை(JKKN MOTAC) கெடா மாநில நிர்வாக அதிகாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகள் கீழ்வருமாறு.
1. SJKT Ladang Henrietta – Tarian Semi Klasik
2. SJKT Palanisamy Kumaran – Tarian Joget
3. SJKT Ladang Bukit Selarong – Tarian Kipas
4. SJKT Ladang Victoria – Tarian Daling-Daling
5. SJKT KO Sarangapany – Tarian Bhangraa
6. SJKT Taman Keladi – Tarian Zapin
7. SJKT Harvard BHG 1 – Tarian Payung
8. SJKT Ladang Bagan Sena – Tarian Sumazau
9. SJKT Bedong – Tarian Senandung
10. SJKT Barathy – Tarian Karagattam
11. SJKT Somasundram – Tarian Sarah

நமது நாட்டின் பல்வேறு கலை மற்றும் கலாச்சாரத்தை போற்றும் விதத்தில் நாம் அனைவரும் கலந்து கொண்டு இந்த போட்டிகளை நேரில் காண அழைக்கின்றோம்.