கோலாலம்பூர், 11/9/2024 : இசையமைப்பாளர் ஜெய் முயற்சியில் கடந்த 07/09/2024 அன்று கோலாலம்பூரில் உள்ள தன் ஸ்ரீ கே. ஆர். சோமா அரங்கில் உலக சாதனை முயற்சி ஒன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
“உலகில் முதல் முறையாக பல மொழிகளில் 318 பாடல்களை பாடுதல் மற்றும் இசைக் கருவியில் இசைத்தல்” ஜெய்யின் ஒடிசி மியூசிக் (Jay’s Odyssey Music – JOM) மாணவர்கள் லிங்கன் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்தனர். மலேசியாவின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 13 மாநில கீதங்களும் இந்த சாதனையின் போது பாடி இசைக்கப்பட்டன.
JOM பயிற்சி மையத்தை சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் இந்த சாதனை முயற்சியில் பங்கு கொண்டனர். அனைத்து விதமான பாடல்களும் இந்த சாதனை நிகழ்ச்சியில் பாடப்பட்டன. கீபோர்ட், கிடார், வீணை, ஹார்மோனியம், வயலின் போன்ற பல இசை கருவிகள் வாசிக்கப்பட்டன.
லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் மதிப்பிற்குரிய டாக்டர் கே. ஜோசப் இளந்தென்றல் இந்த சாதனையை நடுவராக இருந்து பார்வையிட்டு இறுதி அறிவிப்பையும் வெளியிட்டார்.
அனைத்து பங்கேற்பாளர்களும் தனி தனியக லிங்கன் புக் ஆப் ரெக்கர்ட்ஸ் சான்றிதழும், உலக சாதனையாளர் பதக்கமும் பெற்றனர்.