கோலாலம்பூர், 11/09/2024 : மலேசியாவின் தற்போதைய முன்னேற்றம், அனைத்து இனத்தவர்களின் வலுவான ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சிகளின் விளைவு ஆகும்.
இந்த முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் வளர்ச்சி செழுமை நோக்கிச் செல்வதற்கும் மதனி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது
ஆற்றல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உலகப் பொருளாதார சூழ்நிலையை ஆராயவும் விவாதிக்கவும் உலகம் முழுவதிலுமிருந்து 4,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்களை ஒருங்கிணைக்கும் ஒரு முக்கியமான தளமான 17வது உலக சீன தொழில்முனைவோர் மாநாட்டை துவக்கி வைக்கும் போது இந்த முக்கியத்துவத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
அதே மேடையில், மதனி பொருளாதாரக் கட்டமைப்பு ஒரு சாதகமான மற்றும் முதலீட்டாளர் நட்பு சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது என்ற தனது உறுதியையும் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் சீனாவுடனான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து பலப்படுத்தப்படும்.
2025 ஆம் ஆண்டு ஆசியான் தலைமைத்துவ பதவிக்கு முன்னதாக, மேலும் மேம்பட்ட மற்றும் வளமான ஆசியான் பொருளாதார நிலப்பரப்பை உருவாக்க பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு தொழில்முனைவோருக்குக் கோரிக்கை விடுத்தார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்