மலாக்கா, 11/09/2024 : பண்டார் ஹிலிர் மலாக்கா , ஹத்தீன் தங்கும் விடுதியில் நடைபெற்ற மலேசிய துணை காவச்துறையினர் சங்கத்தின் 35வது ஆண்டு மாநாட்டில் மலாக்கா காவல்துறையின் துணைத்தலைவர், கமிஷினர் டத்தோ முகமது நஷ்ரி ஷவாவி கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டை புக்கிட் ஆமான் பிடிஆர்எம் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் சிபி டத்தோ வான் ஹாசன் வான் அகமது அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.
மலேசிய துணை காவல்துறையினர் சங்கம் (MAPA), மலேசியா முழுவதிலும் உள்ள துணை காவல்துறை அதிகாரிகளின் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இது காவல்துறை சட்டம் 1976 மற்றும் காவல்துறை (துணை காவலர்) ஒழுங்குமுறைகள் 1970 ஆகியவற்றின் கீழ் நிறுவப்பட்டது.
அதே நிகழ்வில், புக்கிட் அமான் குற்றத்தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர், பல்வேறு துணைப் போலீஸ் ஏஜென்சிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட மொத்தம் (24) நபர்களுக்கு குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் சிபி டத்தோ வான் ஹாசன் வான் அகமது நற்சான்றிதல் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் மலாக்கா குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் தலைவர், ஏசிபி ஃபூ செக் செங், மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறையின் துணைத் தலைவர், சுப்ட் ஹலீம் அபாஸ் மற்றும் மலேசிய துணைக் காவல்துறையினர் சங்கத்தின் (MAPA) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.