என் தமிழ்

பிள்ளைகளின் வளர்ச்சிக்குப் பெற்றோரின் பங்கு முக்கியம் – தமிழ் அறவாரியம்

பேராக், 08/09/2024 : தமிழ் அறவாரியத்தின் பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம் (இம்பாக்) திட்டத்தின் சான்றிதழ் வழங்கும் விழா கடந்த 8-ஆம் திகதி பேராக் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஏறக்குறைய 90 பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மேலும், பெற்றோர்கள் தங்களுடைய அனுப்பவத்தையும் பிள்ளைகளின் வளர்ச்சிக்குப் பெற்றோரின் பங்கின் முக்கியத்துவத்தையும் பகிர்ந்தனர். வகுப்பறை நேரத்தைத் தவிர்த்து வீட்டில் இருக்கும்போது மாணவர்களின் நடவடிக்கைகளிலும் படிப்பிலும் முன்னேற்றத்திலும் பெற்றோர்கள் அக்கறை செலுத்துவதற்கான மனப்பான்மையை இத்திட்டம் உருவாக்கியுள்ளது.

‘பெற்றோரின் உருமாற்றம், சமுதாயத்தின் முன்னேற்றம்’.

Scroll to Top