புத்ராஜெயா, 02/09/2024 : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடனான செய்தியாளர் சந்திப்பின் போது, மூலோபாய கூட்டாண்மையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பகுதிகளில் நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து பயனுள்ள கலந்துரையாடலை நடத்தியதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார். கூட்டாண்மையில் செழிப்பு, மக்கள், கிரகம், அமைதி மற்றும் பாதுகாப்பு போன்றவை முதன்மைப் படுத்தபடும்.
பரஸ்பர அக்கறை கொண்ட பல பிரச்சினைகளை நாங்கள் எழுப்பியுள்ளோம்.பரஸ்பர புரிந்துணர்வில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான முன்னோக்க வழிகள் கண்டறியபடும்.இதில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, விவசாயம், கல்வி, தேசப்பாதுகாப்பு, காவல் மற்றும் ஹலால் துறை ஆகியவை அடங்கும் என பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் நடந்த இருதரப்பு சந்திப்பு மற்றும் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு சிறப்பு விருந்தேம்பல் நிகழ்வு நடைப்பெற்றது.
அதேவேளையில் மலேசியாவின் பல இன சமூகத்தை அடையாளப்படுத்தும் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் தூதுக்குழுவினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.