மலேசிய இந்திய கர்நாடக இசைக் கலைஞர்களின் இயக்கம் (ICAN) ஏற்பாட்டில் மும்மூர்த்திகள் விழா 1/09/2024 பிரிக்பில்ஸ் கலாமண்டபத்தில் நடைப்பெற்றது.
மற்றுமொரு வருடாந்திர அத்தியாயத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு பாராட்டுக்கள். இவ்விழாவில் இளம் மற்றும் வளரும் கலைஞர்கள் மற்றும் மூத்த இசைக்கலைஞர்களுக்கும் தியாகராஜர் கீர்தனைகளை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
கோலாலம்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையத்தின் புதிய இயக்குனர் ஸ்ரீமதி விஜயலட்சுமி அவர்கள் கெளரவ விருந்தினராக கலந்துக் கொண்டார். இந்திய கலைகள் வேலும் வளர இதுபோன்ற நிகழ்வுகளை பெரிதும் வரவேற்பதாக தனதுரையில் கூறினார்.
மேலும் இந்தியவில் நுண்கலை பயில விரும்புவோர்க்கு சிறப்பு சலுகை இருப்பதாகவும் அதனை பற்றிய மேல் விபரங்களுக்கு மையத்தை நாடுமாறு கேட்டுகொண்டார்.
இந்நிகழ்வில் பங்குப்பெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த ICAN குழுவினருக்கும் என் தமிழின் வாழ்த்துக்கள்.