மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் 2024 தொடங்கப்பட்டது

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் 2024 தொடங்கப்பட்டது

பிரான்ஸ், 02/09/2024 : பாரிஸ் பிரான்ஸில், மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் 2024 தொடங்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க சாம்ப்ஸ் எலிசீஸ் மற்றும் பிளேஸ் டி லா கான்கார்ட்டில் நடைபெற்ற துவக்க விழாவில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் தொடக்க விழாவில் மிக விமர்சையாக தொடங்கியது. இவ்விழாவில் பிரான்ஸ் விமான படையினரின் சாகச நிகழ்ச்சியும், மாற்றுத்திறனாளி கலைஞர்கள் அரங்கேற்றிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொடர்ந்து, பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.