பந்திங், சிலாங்கூர் – 1 செப்டம்பர் 2024 : பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி 30/08/2024 அன்று பிரிவு 1,மேற்கு கடற்கரை நெடுஞ்சலையைத் திறந்து வைத்தார்.
WCE பிரிவு 1 நெடுஞ்சாலை 12.5 கிலோமீட்டர் நீளத்தை உள்ளடக்கியது, இது ஜாலான் டெங்கில் – பந்திங் (FT31) மற்றும் SKVE நெடுஞ்சாலையை இணைக்கிறது.
அதிகாரப்பூர்வமாக இந்நெடுஞ்சாலைப் பயனாளர்களுக்கு ஆகஸ்ட் 31 நள்ளிரவு 12.01 மணிக்குத் திறக்கப்பட்டது.
314.5 கிமீ நீளம் கொண்ட WCE நெடுஞ்சாலை என்பது பேராக் (வடக்கு) மாநிலத்தில் உள்ள சாங்கட் ஜெரிங்கிலிருந்து சிலாங்கூர் (மத்திய) மாநிலத்தில் உள்ள பந்திங்கை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்.
தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள நகரங்களுக்கு இடையேயான இந்த நெடுஞ்சாலை பேராக் மாநிலத்தில் உள்ள பேருவாஸ், ஸ்ரீ மஞ்சூங், சித்தியாவான், தெலுக் இந்தான், பாகன் டத்தோ, ஹுதான் மெலிண்தாங் மற்றும் சிலாங்கூரில் சபாக் பெர்னாம், தஞ்சோங் கராங், கோலா சிலாங்கூர், கிள்ளான், ஷா ஆலம் மற்றும் பந்திங் போன்ற முக்கிய இடங்கள் வழியாக செல்கிறது.