தேசிய தினம் 2024 அணிவகுப்பு நிகழ்வில் 17,262 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
புத்ராஜெயா தேசிய தின கொண்டாட்டத்தில் சிலாங்கூர் மாநில கல்வித் துறையின் கீழ் 2,000 மாணவர்களை உள்ளடக்கிய மனித கிராஃபிக் டெரஸ் ,கோலாலம்பூர் கல்வித் துறையின் கீழ் 300 மாணவர்களைக் கொண்ட இசை குழு, மலேசிய ஆயுதப் படைகளின் நிராயுதபாணி போர் கண்காட்சி மற்றும் மலேசிய நிகழ்ச்சிகளான மதனி ஜிவா ஆகியவை சுவாரஸ்யமானவையாக அமைந்தது. கலாச்சாரத் துறை மற்றும் கலைத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா கலை மற்றும் கலாச்சார அமைப்புகளின் கலாச்சார கலைஞர்களின் கலவையால் பன்முகத்தன்மையில் ஒன்றியம் என்ற கருப்பொருளுடன் நிகழ்ந்தது.
67வது கொண்டாட்டத்தின் அடையாளமாக, மதனி மலேசியாவின் கோட்பாடுகேற்ப, வேற்றுமையில் ஒற்றுமையெனும் கருப்பெருளில், பல்வேறு இனப் பின்னணிகள், வயது மற்றும் தொழில்களைச் சேர்ந்த மொத்தம் 67 KMJG வாகனங்கள் அணிவகுத்தன.