இந்துக்களின் ஆன்மீக, தார்மீக, கலாச்சார மற்றும் சமூக நலன்களை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கம் இன்றுவரை உறுதியாக உள்ளது – பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் ஹு

இந்துக்களின் ஆன்மீக, தார்மீக, கலாச்சார மற்றும் சமூக நலன்களை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கம் இன்றுவரை உறுதியாக உள்ளது - பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் ஹு

பினாங்கு, 30/08/2024 : “மலேசிய இந்து சங்கம் (MHS) மலேசியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது, இந்துக்களின் ஆன்மீக, தார்மீக, கலாச்சார மற்றும் சமூக நலன்களை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கம் இன்றுவரை உறுதியாக உள்ளது” என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் ஹு கூறினார்.மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில கவுன்சில், பினாங்கு இந்து அறநிலைய வாரியம் மற்றும் பினாங்கு மாநில ம.இ.கா ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை வலுவாக ஊக்குவிப்பதாகவும் இந்த ஒத்துழைப்புகள் இந்திய சமூகம் முன்னேறுவதற்கு வழிவகுக்கும் என்று அவர் நம்புவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு பட்டர்வொர்த்தில் அமைந்துள்ள மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற திருமுறை பாராயண விழாவின் நிறைவு விழாவில் சௌ தனது உரையில் கூறினார்.
மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில பேரவை நடத்திய திருமுறை ஓதும் போட்டியில் பினாங்கில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 3,500 பேர் பங்கேற்றனர்.
விழாவின் போது பினாங்கு மாநில பேரவை தலைவரிடம் PHEB மற்றும் ம.இ.கா தலைவர்கள் நன்கொடைகள் வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, ஆர்.எஸ்.என்.ரேயர், ஜெலுடோங்,லிங்கேஷ் ஆர்.ஏ., டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம், திரு.சண்முகம் மூக்கன், மலேசிய இந்துசங்க தேசியத் தலைவர் சங்கபூஷன் தங்க கணேசன் மற்றும் பினாங்கு மாநில தலைவர் விவேக ரத்னா தர்மன் ஆனந்தன் பி.கே.டி. ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.