ஜாலான் மஸ்ஜித் இந்தியா அருகே உள்ள சாக்கடையில் 15 மீட்டர் நீளத்திற்கு அடைப்பு – தேடல் முயற்சியில் தடங்கல்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா அருகே உள்ள சாக்கடையில் 15 மீட்டர் நீளத்திற்கு அடைப்பு - தேடல் முயற்சியில் தடங்கல்

கோலாலம்பூர், 30/08/2024 : ஜாலான் மஸ்ஜித் இந்தியா அருகே உள்ள சாக்கடையில் 15 மீட்டர் நீளத்திற்கு அடைப்பு ஏற்பட்டுள்ளதால், இந்திய சுற்றுலாப் பயணி விஜயலட்சுமியைத் தேடுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

சாக்கடைக்குள் நுழைந்த குழுவினரின் கூற்றுப்படி சாக்கடை அடைப்பில் பாட்டில்கள், டயர்கள்,முடி மற்றும் திடப்படுத்தப்பட்ட கொழுப்புகள் ஆகியவை அடங்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்திய சுற்றுலாப் பயணி ஜி.விஜயலட்சுமி விழுந்த இடத்திலிருந்து 44 மீ தொலைவில் அடைப்பு அமைந்துள்ளது என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார்.

“காலி செய்யப்பட்ட தரையிலிருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு பீப்பாய்கள் பந்தாய் டலாம் கழிவு நீர் சுத்தகரிப்பு (இண்டா வாட்டர் கன்சோர்டியம்) ஆலைக்கு வரவில்லை, ”என்று அவர் இன்று சம்பவ இடத்தில் கூறினார்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல், குழாய்களில் நீர்மட்டத்தைக் குறைப்பதற்காக, நீரின் ஓட்டத்தை திசை திருப்பும் பணியில் மீட்புத்துறை ஈடுபட்டுள்ளது என்றார்.

“நீர் மட்டத்தை மேலும் குறைக்க 10,000 முதல் 20,000 லிட்டர் வரை தண்ணீரை இறைக்கும் உயர் திறன் கொண்ட பம்புகளைப் பயன்படுத்தினோம்.

“நாங்கள் அதிகாலை 4 மணிக்கு முடிவுகளைப் பார்க்க ஆரம்பித்தோம். குழாய்களில் உள்ள நீர் மட்டம் 1.5 மீட்டரிலிருந்து 0.8 மீட்டராகக் குறைந்தது.”

குழாய்களில் உள்ள நீர் அளவை,அளவிட இரண்டு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. மாலை 5 மணியளவில் அடைப்புகளை அகற்றும் முயற்சிகள் தொடங்கியது, என்றார்.

“தடை அகற்றப்பட்டவுடன், குழாயின் உட்புறத்தை தெளிவாகப் பார்க்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்.நாங்கள் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அகாடமியில் இருந்து நான்கு நீர் மூழ்கி நிபுணர்களைக் கொண்டு வந்து சாக்கடையில் இறங்குவதற்கான சாத்தியக்கூறுகளைப் பார்க்கிறோம்.”

“அவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், விஸ்மா யாகின் கட்டிடத்தின் பின் நீரோட்டங்கள் மிகவும் வலுவாக உள்ளன.நீர் தேக்கம் சுமார் 100 கன மீட்டர் அழுத்தத்தை உருவாக்கக்கூடும்” என்று திணைக்களம் நம்புவதாக நோர் ஹிஷாம் கூறினார்.

தடையாக உள்ள குப்பைகளை மெதுவாக அகற்றுவோம்.நாங்கள் உயர் அழுத்த ஜெட்டுடன் தொடங்குவோம். குப்பைகளை இழுக்க உலோக கம்பிகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்துவோம்.”

சாக்கடைக்குள் நுழையும் குழுவினரின் பாதுகப்பிற்கா ஸ்கூபா கியர் மற்றும் ஆக்ஸிஜன் தொட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இண்டா வாட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு ஆலையின் செயல்பாட்டு நடைமுறைகளுக்கு ஏற்ப, சாக்கடையில் உள்ள வாயு அளவை குழு கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.