ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மற்றுமொறு இடத்தில் நிலம் உள்வாங்கி உள்ளது

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மற்றுமொறு இடத்தில் நிலம் உள்வாங்கி உள்ளது

கோலாலம்பூர், 28/08/2024 : ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மற்றுமொறு இடத்தில் நிலம் உள்வாங்கி உள்ளது இன்று அதிகாலை கண்டறியப்பட்டது. கடந்த 23 ஆகஸ்ட் வெள்ளிக்கிழமையன்று தரையில் திடீரென இடிந்து விழுந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இந்த தீடிர் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் கடந்த வெள்ளியன்று ஒரு பெண் பாதசாரியை நிலம் உள்விழுங்கி அதற்கான தேடல் பணிகள் நடந்துக்கொண்டிருகின்றன.
நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக இன்று அதிகாலை 2.30 மணியளவில் சமீபத்திய சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பாதுகாவலர் குழுவினர் நிலம் மூழ்கும் இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.அந்த இடத்தில் மேலும் சோதனைகள் நடந்து வருவது தெரியவந்துள்ளது.