ஒற்றுமை அரசு செயலக ஊடக அறிக்கை

ஒற்றுமை அரசு செயலக ஊடக அறிக்கை

புத்ராஜெயா, 28-08-2024 :  புத்ராஜெயா ஸ்ரீ பெர்டானாவில் 27 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்ற மலேசிய ஒற்றுமை அரசாங்கத் தலைமைத்துவ ஆலோசனைக் குழுக் கூட்டம் பின்வருமாறு பல தீர்மானங்களைச் செய்ததுள்ளது:

1. நெங்கிரி மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் (பிஆர்கே) அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்தும் வாழ்த்தும் தெரிவித்தது.

2.தேசிய முன்னனியின் உயர்மட்டத் தலைமையால் தேர்தெடுக்கப்படும் மலேசிய ஒற்றுமை அரசாங்கப் பிரதிநிதியான மகோதா சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளரை முழுமையாக ஆதரிக்கும்.

3. ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முழு இயந்திரமும், குறிப்பாக பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான், பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் முழு ஆதரவையும் மக்கோதா சட்டமன்றத்தில் வென்றெடுக்க முழுமையாக அணிதிரட்டப்படும்.

கீழ்கண்டவாறு இடைத்தேர்தல் எண். 29 மக்கோதா சட்டமன்ற அதிகாரிகள் :
-இடைத்தேர்தல் இயக்குனர்: டத்தோ ஓன் ஹஃபிஸ் பின் க்ஹாசலி
– பக்காத்தான் ஹராப்பான் இயந்திர ஒருங்கிணைப்பாளர்: துவான் ஹாஜி அமினோல்ஹுதா பின் ஹாசன்

5. 3Rs தொடர்பான பிரச்சினைகளை தீவிரமாகப் பார்த்ததுடன், மத்திய அரசமைப்புச் சட்டப்படி மன்னர்களின் இறையாண்மை மற்றும் நிலைப்பாட்டைத் தொடர்ந்து பாதுகாக்கும்.

இங்கணம்
டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி,
செயலகத் தலைவர்,
மலேசிய ஒற்றுமை அரசு.