புத்தாக்க உள்ளடக்க நிதி (டிகேகே) 2024 : FINAS இன் கீழ் ரி.ம 13 மில்லியன், 5 பிரிவுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புத்தாக்க உள்ளடக்க நிதி (டிகேகே) 2024 :  FINAS இன் கீழ் ரி.ம 13 மில்லியன், 5 பிரிவுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை தகவல் தொடர்பு துணை அமைச்சர்  தியோ நீ சிங் மலேசிய தமிழ் கலைஞர்கள் சங்க சந்திப்பிற்குத் தலைமை தாங்கினார்.

கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி, மேலவையில் YB செனட்டர் டத்தோ டாக்டர் ஆர். நெல்சன் எழுப்பிய கேள்வியின் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு அமைந்தது. முன்னதாக, இவ்விகாரம் தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் சில சந்திப்புகள் நடத்தப்பட்டன.

இன்றைய சந்திப்பில், சில முக்கிய அறிவிப்புகளை தியோ நீ சிங் அறிவித்தார்.

1. புத்தாக்க உள்ளடக்க நிதி (டிகேகே) 2024 :
FINAS இன் கீழ் ரி.ம 13 மில்லியன், 5 பிரிவுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 2024 முதல் விண்ணப்பங்கள் திறக்கப்படும்.

2. ‘தாளம்’ நிகழ்ச்சி :
மின்னல் எப்.எம்மில் ஒலியேறும் ‘தாளம்’ நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு 6 தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்த முயற்சியின் மூலம் மாநில கலைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

3. உள்ளூர் பாடல்களின் ஒலிபரப்பு நேரம் அதிகரிப்பு :
இவ்வாண்டு நவம்பர் 1 முதல், மின்னல் எம்.எம்மில் ஒலியேறும் உள்ளூர் தமிழ் பாடல்களின் ஒலிபரப்பு நேரம் வாரத்திற்கு 450 நிமிடங்களிலிருந்து 1005 நிமிடங்களாக அதிகரிக்கப்படும்.

4. உள்ளூர் தமிழ் பத்திரிக்கையாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான பயிற்சிகள் :
உள்ளூர் தமிழ் பத்திரிக்கையாளர்கள் மற்றும் கலைஞர்களுக்காக 2025 இல் இரண்டு பயிற்சிகளும், ஒரு பயிற்சி பட்டறையை நடத்த IPPTAR திட்டமிட்டுள்ளது.

5. “ACE பயிற்சி” திட்டம்:
MyCreative Ventures, இவ்வாண்டு செப்டம்பர் தொடங்கி 6 இடங்களில் “ACE பயிற்சியை” செயல்படுத்தும். விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும்.

தொடர்புதுறை அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டடுள்ள இந்த முயற்சிகளுக்கு விண்ணப்பித்து, அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் கேட்டுக்கொண்டார்.