புத்ராஜெயா, 27/08/2024 : அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தியிடல் பயன்பாட்டு சேவை வழங்குநர்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு அல்லது உரிமம் அமலாக்க சட்டத்தை செயல்படுத்துவதை தாமதப்படுத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ ஒற்றுமை அரசாங்கத்திற்கு எந்த திட்டமும் இல்லை. பயனாளர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான செயலாக்க நடவடிக்கைகளை அடைய திட்டமிட்டபடி இது தொடரும் என்றார் தகவல்தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபஹ்சில்.
சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு வந்திருந்த ஆசிய இணையக் கூட்டணி (AIC) திறந்த கடிதத்திற்கு “நாங்கள் தாமதிக்க மாட்டோம்” என்று அவர் பதிலளித்தார்.
இணையதளத்தில் வெளியிடப்பட்ட திறந்த கடிதத்தில், நாட்டில் குறைந்தது எட்டு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி சேவைகளுக்கான உரிம விண்ணப்பங்களை கட்டாயமாக்கும் திட்டத்தை ஒத்திவைக்குமாறு AIC அரசாங்கத்தை வலியுறுத்தியது.