பந்தாய் டாலாம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தேடல் பணிகள் தொடரும். -அமைச்சர் ஃபஹ்மி ஃபசில்

பந்தாய் டாலாம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தேடல் பணிகள் தொடரும். -அமைச்சர் ஃபஹ்மி ஃபசில்

பந்தாய் டாலாம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தேடல் பணிகள் தொடரும். விரைவில் இந்திய மாதுவின் நிலை கண்டறிய படுமென அமைச்சர் ஃபஹ்மி ஃபசில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 23 அன்று ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடைபாதை சரிந்து விழுந்த சம்பவத்தில் இந்திய மாது விஜயலட்சுமி விழுந்து புதையுண்டார்.அவர் கழிவு நீர் குழாய்களில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதால் அந்நீர் குழாய்களில் தேடும் பணி தொடர்கிறது.சுமார் 7 கிலோ மீட்டார் தூரம் செல்லும் அக்குழாயின் அனைத்து கழிவுகளும் பந்தாய் டாலாம் கழிவு நீர் மையத்திற்கு தான் சென்றடையும் என அமச்சர் கூறினார்.இதன் அடிப்படையில் கடந்த 5 நாட்களாக இங்கு தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
“இந்த கழிவு நீர் சுத்தகரிப்பு மையம் பந்தாய் டாலாம் நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ளது. இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இங்கு நடக்கும் பணிகளை பார்வையிட்டேன். மேலும் இங்குள்ள அதிகாரிகள் எனக்கு முழு விளக்கத்தையும் அளித்துள்ளனர். விரைவில் இந்திய மாதுவின் நிலை கண்டறிய படும்” என்று அவர் சொன்னார்.