மலேசியா – புருணை தலைவர்களின் 25வது ஆண்டு கூட்டம்

மலேசியா - புருணை தலைவர்களின் 25வது ஆண்டு கூட்டம்

பண்டார் ஶ்ரீ பெகாவான், 26/08/2024 : இஸ்தானா நூருல் இமானில் நடைபெற்ற மலேசியா மற்றும் புருணை தலைவர்களின் 25வது ஆண்டு கூட்டம் அவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த வழிவகுத்தது.

மலேசியாவிற்கும் புரூணைக்கும் இடையிலான நல்லுறவைத் தொடரும் முயற்சியிலும் நிலைநிறுத்துவதிலும், முந்தையத் தலைவர்களின் பங்களிப்பை அரசாங்கம் மறுக்க முடியாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

எனினும், இந்த கூட்டுறவைத் தொடருவதில் மலேசியாவிற்கும் புரூணைக்கும் இடையிலான உறவு அவ்விரு நாடுகளுக்கும் மேலும் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை அளிப்பதை உறுதிசெய்ய அரசாங்கத்திற்கு வெவ்வேறு அணுகுமுறைகள் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

‘அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் தனியார் துறை மூலம் ஆற்றல் மாற்றம், இலக்கவியல், மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு ஆகிய புதிய துறையில் பயிற்சிகள் வழங்கப்படும். எனவே இந்த துறைகளில் புருணையை சேர்ந்த இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்ய நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்,” என்று பிதமர் கூறினார்.

முன்னதாக, புருணை சுல்தான், சுல்தான் ஹஸ்சானால் பொல்கியாவுடன் பிரதமருடன் சந்திப்பு நடத்தினார்.

சுற்றுலா, கல்வி, முதலீடு, இலக்கியம், தொழில்நுட்பம் மற்றும் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க மலேசியாவும் புருனேயும் ஒப்புக்கொண்டதாக அன்வார் கூறினார்.

கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்பை மேற்கொள்வதுடன் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் இளங்கலைப் பட்டதாரிகளின் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு ஒத்துழைப்புத் திட்டங்களை மலேசியாவும் புருணையும் செயல்படுத்தக் கலந்துரையாடப்பட்டதாகப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.