ஜொகூர் பாரு, 27/08/2024 : கோல்ட் சேம்பியன் மேனேஜமண்ட் ஏற்பாட்டில் கிட்ஸ் ஸ்டைலிஷ் பேஷன் போட்டி, கலர்ஸ் ஆப் இந்தியா ஏற்பாட்டில் ஜொகூர் பாருவில் சூத்ரா மாலில் 23/08/2024 முதல் நடைபெற்று வரும் தென்கிழக்கு ஆசிய தீபாவளி திருவிழா மற்றும் வர்த்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக வெற்றிகரமாக நடைபெற்றது. 24/08/2024 பிற்பகல் நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் 50 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பல்லின சிறுவர் சிறுமியர் இந்த போடியில் கலந்து கொண்டு வண்ணமயமான ஆடை அலங்காரத்தில் மேடையில் தோன்றி பார்ப்பவரை கவர்ந்தனர். கோல்ட் சேம்பியன் மேனேஜ்மண்டின் நிறுவனர் Dr. கீதா தேவி சுப்ரமணியம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.