மலேசிய இளம் பாடகர் ஹேமித்ரா மேடையில் தனியாக பாடி அனைவரையும் ஈர்த்தார்

மலேசிய இளம் பாடகர் ஹேமித்ரா மேடையில் தனியாக பாடி அனைவரையும் ஈர்த்தார்

ஜொகூர் பாரு, 26/08/2024 : தென்கிழக்கு ஆசிய தீபாவளி கொண்டாட்டம் மற்றும் வர்த்தக கண்காட்சியில் பொது மக்களை ஈர்க்கும் நோக்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கலர்ஸ் ஆப் இந்தியா ஏற்பாட்டில் 23/08/2024 முதல் 01/09/2024 வரை தென்கிழக்கு ஆசிய தீபாவளி கொண்டாட்டம் மற்றும் வர்த்தக கண்காட்சி ஜொகூர் பாருவில் உள்ள சூத்ரா வணிக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் கலர்ஸ் ஆப் இந்தியா மேடை கலை நிகழ்ச்சி 25/08/2024 அன்று நடைபெற்றது. மலேசியாவின் மிகப் பிரபலமான மேடை இசைக் கலைஞர் டார்க்கி, மலேசிய மற்றும் இந்திய பாடகர்கள் பலர் இந்த மேடை கலை நிக்ழச்சியில் பாடி மக்களை மகிழ்வித்தனர்.

மலேசியாவில் வளர்ந்து வரும் இளம் பாடகி ஹேமித்ரா ரவிச்சந்திரன் கலர்ஸ் ஆப் இந்தியா மேடை கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடினார். இனிமையாக பாடக் கூடிய திறமையான ஹேமித்ரா தனியாக மேடையில் பாடி இசை ரசிகர்களை மகிழ்வித்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. பல பாடல் திறன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ள ஹேமித்ராவிற்கு இந்த தனி மேடை அனுபவம் அவரது இசை பயணத்தில் அடுத்த கட்ட நகர்வாக இருக்கும். டார்க்கி மற்றும் இந்திய பாடகர்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் தனியாக பாடி ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் கலர்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு பாராட்டுதல்களை தெரிவிக்கும் அதே வேளையில் ஹேமித்ராவின் திறமை கண்டுபிடித்து வளர்த்து தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வழிநடத்தும் அவரது பெற்றோர்களின் முயற்சியையும் பாராட்டியே ஆக வேண்டும். ஹேமித்ரா கலை துறையிலும் வாழ்விலும் மேலும் பல சாதனைகள் புரிந்து சிறந்து விளங்க வேண்டும் என என் தமிழ் ஊடகம் சார்பில் வாழ்த்துகிறோம்.