ஜாலான் மஸ்ஜித் இந்தியாதில் காணாமல் போன இந்திய சுற்றுலா பயணியை தேடும் பணி நான்காவது நாளாக தொடர்கிறது

ஜாலான் மஸ்ஜித் இந்தியாதில் காணாமல் போன இந்திய சுற்றுலா பயணியை தேடும் பணி நான்காவது நாளாக தொடர்கிறது

கோலாலம்பூர், 26/08/2024 : ஜாலான் மஸ்ஜித் இந்தியாதில் வெள்ளிக்கிழமை அன்று காலை 08.22 மணியளவில் நடைபாதையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்து புதை மணலில் சிக்கி காணாமல் போன இந்திய சுற்றுலா பயணி திருமதி விஜயலட்சுமி அவர்களை தேடும் பணி நான்காவது நாளாக இன்று 26/08/2024 காலை முதல் மீண்டும் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினரால் (SAR Team) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Flushing Technique என்கிற முறைப்படி இந்த தேடுதல் வேட்டை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று வரை 5 ஆளிறங்கும் குழியில்( Manhole) இந்த முறைப்படி தேடுதல் வேட்டை நடைபெற்றது.

முன்னர் இதுகுறித்து 25/08/2024 அன்று வெளியிடப்பட்ட பிரதமரின் அறிக்கையில் காணாமல் போனவரை கண்டுபிடிக்கும் வரை இந்த தேடுதல் வேட்டை தொடரும் என மாண்புமிகு பிரதம டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். காணாமல் போனவரின் குடும்பத்தாருக்கு பிரதமர் தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்..

மேலும் காணமல் போனவரின் உறுவினர்களின் விசா நீட்டிற்புக்கான ஏற்பாடுகள் இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செய்யப்படும்.