5000 மலேசியர்களை பயிற்றுவித்து வேலைக்கு அமர்த்த MDEC, Nasscom இடையே ஒப்பந்தம்

5000 மலேசியர்களை பயிற்றுவித்து வேலைக்கு அமர்த்த MDEC, Nasscom இடையே ஒப்பந்தம்

புத்ராஜெயா, 25/08/2024 : மலேசிய டிஜிட்டல் எகனாமி கார்ப்பரேஷன் (Malaysia Digital Economy Corporation (MDEC) மற்றும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பு (National Association of Software and Service Companies (Nasscom) இடையே உருவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து குறைந்தது 5,000 மலேசியர்களுக்கு பயிற்சி அளித்து வேலைக்கு அமர்த்த மலேசியாவில் உள்ள ஏழு சர்வதேச இந்திய நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

பயிற்சி மற்றும் வேலைக்கு அமர்த்தும் இந்த திட்டத்தின் இந்த ஆண்டு முதல் அடுத்த மூன்று ஆண்டுகளில் அமல் படுத்த படும். இந்த முன்மாதிரி திட்டத்தில் பங்குபெற மேலும் பல நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.

MDEC மற்றும் NASSCOM கூட்டணி ஜெனரேடிவ் செயற்கை நுன்னறிவு (Generative Artificial Intelligence (AI), இணைய பாதுகாப்பு(Cyber Security), மென்பொருள் உருவாக்குதல் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் ஆகிய பல்வேறு டிஜிட்டல் துறையில் பல முக்கிய பிரிவுகளில் உள்ளூர் திறன்களுக்கு பயிற்சி அளிப்பதை உறுதிபடுத்தும்

முன்னதாக MDEC மற்றும் NASSCOM புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி பரிமாறிக் கொண்ட நிகழ்ச்சியில் இந்தியா புதுடெல்லியில் 21 ஆகஸ்டு 2024 அன்று அமைச்சர் கோபிந்த் சிங் நேரில் கலந்துகொண்டார்.

”மடானி அரசாங்கம் முதலீட்டார்களை ஈர்க்க உலக தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் நம்பகத்தன்மையை தொடர்ந்து மேம்படுத்தும் பணி வேகமாக நடைபெற திறமைகள் முக்கிய கூறுகளாக இருக்கும்.

புதிய தொழில்நுட்பம் தினம்தினம் உருவாகி வரும் இன்றைய சூழலில், வேகமாக வளந்துவரும் டிஜிட்டல் உலகில் திறமையானவர்களை உருவாக்கிவது மிகவும் அவசியமாகிறது. இளைஞர்களுக்கு பயிற்சியளிப்பதில் தொடங்கி வேலையில் இருப்பவர்களுக்கு மாற்று திறன்கள் மற்றும் திறன் மேபாடு ஆகியவையும் அடங்கும்.

டிஜிட்டல் தேசம் உருவாக்கும் நமது இந்த முயற்சியில் யாரும் பிந்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த இத்தகைய முயற்சிகள் உதவும்” என டிஜிட்டல் அமைச்சர் திரு, கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

1988 இல் துவங்கப்பட்ட NASSCOM அமைப்பு இந்திய தொழில்நுட்ப துறை மேம்பாட்டிற்காக சேவையாற்றும் ஒரு அரசுசாரா வர்த்தக சங்கமாகும்.