ஜொகூர் பாருவில் தென்கிழக்கு ஆசிய தீபாவளி கொண்டாட்டம் மற்றும் வர்த்தக கண்காட்சி அதிகார பூர்வ திறப்பு விழா

ஜொகூர் பாருவில் தென்கிழக்கு ஆசிய தீபாவளி கொண்டாட்டம் மற்றும் வர்த்தக கண்காட்சி அதிகார பூர்வ திறப்பு விழா

கலர்ஸ் ஆப் இந்தியா ஏற்பாட்டில் 23/08/2024 முதல் 01/09/2024 வரை தென்கிழக்கு ஆசிய தீபாவளி கொண்டாட்டம் மற்றும் வர்த்தக கண்காட்சி ஜொகூர் பாருவில் உள்ள சூத்ரா வணிக வளாகத்தில் நடைபெறுகிறது.

கண்காட்சியின் முதல் நாள் 23/08/2024 நடைபெற்ற நிகழ்வில் ஸ்கூடாய் ஜோகூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி மரினா பிந்தி இப்ராஹீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இக்காண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

200க்கும் மேற்பட்ட அங்காடி கடைகளை கொண்ட வணிக வளாகத்தில் நடத்தப்படும் முதல் தீபாவளி வர்த்தக கண்காட்சி இதுவாகும்.

தீபாவளிக்கு தேவையான ஆடைகள், இமிடேஷன் நகைகள், வீட்டு உபையோகப் பொருட்கள் மற்றும் பலதரப்பட்ட பொருட்கள் இந்த பொருட்காட்சியில் விற்கப்படுகின்றன. ஆகஸ்ட் 23 ஆம் திகதி தொடங்கி செப்டெம்பர் 1ஆம் திகதி வரை கலர்ஸ் ஆப்  இந்தியாவின் தென்கிழக்கு ஆசிய தீபாவளி கொண்டாட்டம் மற்றும் வர்த்தக கண்காட்சி நடைபெறும்

.