கெடா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான மலேசிய மக்களின் பாரம்பரிய நடனப் போட்டி இரண்டாவது முறையாக மிக விமரிசையாக 23 ஆகஸ்ட் 2024 நடந்தேறியது.
கடார சிவாஜி கலாச்சார மன்றம் ஏற்பாட்டில், சாய் நந்தினி திரை உலகம் நிறுவனம் மற்றும் கெடா இந்தியத் திரைப்படச் சங்கமும் இணைந்து இந்த மாநில அளவிலான போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
கடந்தாண்டு அறிமுகப் படுத்தப்பட்ட இந்த நடனப் போட்டிக்கு Tourism Malaysia சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சு தனது ஆதரவை வழங்கி இருந்தது.
கடந்தாண்டு நடைப்பெற்ற இப்போட்டிக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, இம்முறையும் சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சு Tourism Malaysia தனது அதிகாரப்பூர்வ ஆதரவை இந்நிகழ்ச்சிக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு 13 தமிழ்ப் பள்ளிகள் கலந்து கொண்ட தேர்வுச் சுற்றுப் போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதி வெள்ளிக் கிழமை, சுங்கை பட்டாணி, தாமான் கெளாடி மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
தேர்வுச் சுற்றுப் போட்டியை Dr.ம.லிங்கேஸ்வரன்(HC), நிர்வாக இயக்குநர், எமரல்ட் சிக்ஸ் மார்கெட்டிங் அவர்கள் அதிகாரப் பூர்வமாக துவக்கி வைத்து உரையற்றினர். “நடனம் மட்டும் நமது கலையல்ல 64 கலைகளில் பாடுவது , இசைக்கருவி வாசித்தல் என்று பல வகை உள்ளன. அடுத்த ஆண்டுக்கன திட்டதில் தேவாரம் ஓதும் போட்டி அதற்கான பரிசு தொகை பத்தாயிரம் வெள்ளி ஏற்படு செய்யயுள்ளதாக கூறினார்.
இறுதிச் சுற்றுப் போட்டிக்கு 10 பள்ளிகள் தேர்வுச் செய்யப்படவிருந்த நிலையில் மாணவர்களின் அபாரமான நடனங்களை மதிப்பிட்ட பின், இறுதி சுற்றுக்கு 13 பள்ளிகளுமே நீதிபதிகளின் முடிவோடு தேர்வு செய்யப்பட்டன. இந்த மாபெரும் இறுதிப் போட்டி செப்டம்பர் 13ஆம் தேதி சுங்கைப் பட்டாணி காந்தி மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
நாடறிந்த 5 நடுவர்கள் தலைமையில் இந்த தேர்வுப் போட்டி நடைபெற்றது. நாட்டிய கலா ரத்னா ஸ்ரீமதி அபிராமி சுகுமார், மாஸ்டர் ஜி BKM, மாஸ்டர் பாலன் சாந்திநாதன், மாஸ்டர் MJ தேவா, குமாரி மலையரசி தியாகு ஆகியோர் தேர்வுச் சுற்றுக்கான நடுவர்களாகச் சிறப்பாகச் செயல்பட்டனர்.
நிகழ்வின் ஏற்பாட்டாளராக ஆசிரியர் முனைவர் இலட்சப்பிரபு இராஜகோபாலும், இதன் ஆலோசகராக டாக்டர் மதியழகன் நாராயணசாமியும், தலைமை ஒருங்கிணைப்பாளராக விக்னேஸ் பிரபு, தனேஷ் பிரபு மற்றும் லோகேஸ்வரி ஆகியோர் தம் பணிக் குழுவினரோடு திறம்பட செயல்ப்பட்டனர்.
one size-full wp-image-17250″ />