திருவிளக்கு பூஜை : மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை

திருவிளக்கு பூஜை : மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை

மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கோத்தா கெமுனிங் ஷா அலாம் இணை ஒழுங்கமைப்பில், 16 ஆகஸ்ட் 2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 7.30 மணிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கோத்தா கெமுனிங் ஷா அலாமில் திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. சுமார் 100 பெண் பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்று, தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். மேலும், இந்த பூஜையில் சுமார் 800 பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மலேசியா இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலத் தலைவர் தொண்டர்மாணி திரு. மனோகரன் கிருஷ்ணன், துணைத் தலைவர்தொண்டர்மாணி திருமதி சரஸ்வதி வேலு, மாநிலப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சுபாங் ஜெயா, ஷா அலாம், ஸ்ரீ அண்டாலாஸ், மற்றும் செர்டாங் வட்டாரப் பேரவைத் தலைவர்கள் மற்றும் அவர்களின் செயலவை உறுப்பினர்கள் இத்திருவிளக்கு பூஜையில் பங்கேற்று, நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தனர்.
அன்றைய சிறப்பு நிகழ்வில், மலேசிய இந்து சங்க மாநிலப் பேரவை சுமார் 400 “சுமங்களி தட்டு” களை அனைத்து பெண்களுக்கும் வழங்கியது, இது அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
நிகழ்ச்சி இரவு உணவுடன் நிறைவடைந்தது, இதில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு, நன்றியுடன் பூஜையை முடித்தனர். ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கோத்தா கெமுனிங், ஷா அலாம் தலைவர் திரு. கணேசமூர்த்தி, ஆலய ரச்சகர் டத்தோ நாதன் சுப்பையா, ஆலய அறங்காவலர்கள் மற்றும் ஆலய செயற்குழு உறுப்பினர்களுக்கு நமது இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறோம்,
நமது சமயத்தை மதித்து, நம் மனங்களில் பக்தியின் ஒளியை எப்போதும் ஏற்றி வைத்திருப்போம்.

Source
MHS Selangor State Council