பொதுப்பணித்துறை அமைச்சகத்தால் மொத்தம் 59 பாரம்பரிய கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறை அமைச்சகத்தால் மொத்தம் 59 பாரம்பரிய கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறை இந்த ஆண்டு பாரம்பரிய கட்டிடங்களை மீட்டெடுக்க 59 திட்டங்களை செயல்படுத்தினர்.

இந்த ஆண்டு முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சகத்தால் மொத்தம் 59 பாரம்பரிய கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நான்தா லிங்கி “மத்திய மற்றும் மாநில அளவில் வரலாற்று கட்டிடங்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் ஆலோசனை வழங்கும் சேவைகள் இதில் அடங்கும்”, என தெரிவித்தார்.

இந்த பழையப் பாரம்பரிய கட்டிடங்கள் குறிப்பாக மலாக்கா மற்றும் பினாங்கில் உள்ளவைகளை பராமரிப்பதன் மூலம் நாட்டிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இது உதவும் என்று அவர் நம்புகிறார். இதன் விளம்பரத்தை மேலும் அதிகரிக்க வேண்டுமெனவும் கூறினார்.

“எதிர்வரும் ஆகஸ்ட் 27 2024 அன்று பினாங்கு உயர் நீதிமன்ற கட்டிடத்தை நாங்கள் சீரமைத்து சமர்பிப்போம். இது பாரம்பரியக் கட்டிடங்களைப் பாதுகாப்பு மீட்பு பணிக்குழுவின் தீவிரத்தன்மையை நிரூபிக்கிறது,” என்று அவர் கூறினார்.

இஸ்தானா புடாயா, தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரம் மற்றும் கோலாலம்பூர் மலாயா இரயில்வே (KTM) ஆகியவை பாரம்பரிய கட்டிடங்களில் அடங்கும்.

ஜே.கே.ஆர் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CREaTE) மண்டபத்தில் நடைப்பெற்ற ஆய்வுக்கான தளம்: தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு 2024 (Pentas) நிகழ்ச்சியை அதிகாரப் பூர்வமாக துவக்கி வைத்தபின் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார். பொதுப்பணித்துறை இயக்குநர் டத்தோ ரோஸ்லான் இஸ்மாயில் அவர்களும் இந்நிகழ்வில்  கலந்துகொண்டார்.

பென்டாஸ் நிகழ்ச்சி நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் மூலம் தேசிய வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு அமைச்சகத்தின் அர்ப்பணிப்புக்கு இது சான்றாகும் என்று நந்தா கூறினார்.

சொத்து மேலாண்மை, பாரம்பரிய கட்டிங்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, மேம்பாட்டு திட்டமிடல் ஆகியவற்றில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் நடைப்பெறும் பெண்டாஸ் நிகழ்வில் 400 கட்டிடத்துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்க உள்ளனர்.

#ALEXANDER NANTA LINGGI
#JKR
#BANGUNAN WARISAN
#PEMULIHARAAN DAN PEMELIHARAAN
#PENTAS