தீவிரமாகப் பரவி வரும் குரங்கம்மை நோயினால் சில நாடுகளில் அவசரநிலை அறிவிப்பு

தீவிரமாகப் பரவி வரும் குரங்கம்மை நோயினால் சில நாடுகளில் அவசரநிலை அறிவிப்பு

மிகவும் தீவிரமாகப் பரவி வரும் குரங்கம்மை நோயினால் சில நாடுகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து, காங்கோ ஜனநாயகக் குடியரசில் 16,700 குரங்கம்மை நோய்த் தொற்றுச் சம்பவங்களும் அதனால் 570-க்கு அதிகமான மரணங்களும் பதிவான நிலையில், கடந்த வாரம் மட்டும் 15,664 நோய்த் தொற்றுச் சம்பவங்களும் அதனால் 548 மரணங்களும் பதிவாகியதாக அதன் சுகாதார அமைச்சர் சாமுவெல் ரோஜர் கம்பா தெரிவித்தார்.

2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குரங்கம்மை நோய்த் தொற்றை தேசிய அச்சுறுத்தலாக காங்கோ ஜனநாயகக் குடியரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, அதிகரித்து வந்த நோய்ச் சம்பவங்களைக் கையாள்வதற்காக 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிர்வகிப்பு அமைப்பு ஒன்றை அந்நாடு அமைத்தது.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 17 நாடுகளையும், அதன் வெளியே உள்ள சில நாடுகளையும் அந்நோய் வெகுவாகப் பாதித்து வருகிறது.

இந்நிலையில், இளைஞர்களை, குறிப்பாக 15 வயதிற்கும் கீழ்ப்பட்ட பிள்ளைகளை அந்நோய் பெருமளவில் தாக்கி வருவதாக தரவுகள் கூறுவதை சாமுவெல் குறிப்பிட்டார்.