மலேசிய இந்து சங்கம், கோலகுபுபாரு வட்டாரப் பேரவையின் திருமுறை ஓதும் விழா

மலேசிய இந்து சங்கம், கோலகுபுபாரு வட்டாரப் பேரவையின் திருமுறை ஓதும் விழா

மலேசிய இந்து சங்கம், கோலகுபுபாரு வட்டாரப் பேரவையின் திருமுறை ஓதும் விழா மிகச் சிறப்பான முறையில் இன்று களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்றது. 5 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவர்கள் கலந்துக் கொண்ட இப்போட்டியில் களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியே மீண்டும் இம்முறை சுழல் கிண்ணத்தை வென்றது. கோல குபு பாரு வட்டாரப் பேரவயின் தலைவர் தொண்டர்மணி திரு. கலைச்செல்வன் தலைமையிலான செயலவை உறுப்பினர்கள் ஏற்பாட்டில் நடைப்பெற்ற நிகழ்வில், காலையில் அதிகாரப்பூர்வ நிகழ்வு, திருமுறை ஓதும் போட்டிகள், பரிசளிப்பு நிகழ்வு என மூன்று அங்கங்களாக திருமுறை விழா நடைப்பெற்றது. அதேவேளையில் வட்டாரப் பேரவையின் கீழ் செயல்படும் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கௌரவிப்பு, சமயப்பகுதி ஆசிரியர்கள் கௌரவிப்பு, பள்ளிகளில் சமயப்பகுதி வளர்ச்சிக்கு உதவும் வகையில் பள்ளிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்ட வேளையில் இன்னும் பல முத்தாய்ப்பான நிகழ்வுகளும் நடைப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், உலுபெர்ணாம் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் டத்தோ முகமட் இசா, மலேசிய இந்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தொண்டர்மாமணி திரு. மனோகரன், மாநில துணைத் தலைவர் திருமதி சரஸ்வதி, மாநில பொருளாளர், ரவாங் வட்டாரப் பேரவையின் தலைவரும் தொழிலதிபருமான டத்தோ சுரேஷ், ரவாங் வட்டாரப் பேரவையின் துணைத் தலைவர் திரு, அசோகன், உலுசிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யபிரகாஷ் அவர்களின் இந்தியப் பிரிவுத் தலைவர் திரு. சந்திரன், கோலகுபுபாரு கிராமத்து தலைவி திருமதி தனகேஸ்வரி, பத்தாங்கலி சிலம்பக் கழகத்தின் தலைவர் திரு.முரளி உட்பட தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள், சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆலயப் பொறுப்பாளர்கள் உட்பட இன்னும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தகவல் மற்றும் படங்கள் – மலேசிய இந்து சங்கம்

#MalaysiaHinduSangam
#Entamizh
#EntamizhBakthi