தேசிய அறிவியல் மையம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சகம் (MOSTI) இணைந்து ஏற்பாடு செய்துள்ள கெம்பாரா போர்னியோ சயின்ஸ் 2024 (KBS 2024)நிகழ்வுக்கு அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையின் துணை அமைச்சர் ஒய்.பி. டத்தோ ஹாஜி முகமது யூசுப் அப்டல் வருகைப் புரிந்தார். துவாரன் சபாவில் உள்ள ஸ்ரீ நங்கா இடைநிலைப் பள்ளியில் துவாரன் மாவட்டத்தில் இருந்து 1,537 மாணவர்கள் வரை பங்கேற்றனர்.ஸ்ரீ நங்கா இடைநிலைப் பள்ளி மையப் பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
KSB 2024 நிகழ்வுக்கு, PSN தேசிய அறிவியல் மையத்தின் PSN Trooperz On The Move பேருந்து பிரதியேகமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.PSN Trooperz On The Move பேருந்து என்பது தேசிய அறிவியல் மையத்தின் ஒரு கண்காட்சி பேருந்து ஆகும்.
ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான சிந்தனையை வளர்ப்பதற்கும், அறிவியல் சிந்தனையை நோக்கி மனதை மேலும் தூண்டுவதற்கும் 24 காட்சி பொருட்கள் STEM கருப்பொருளுடன் இப்பேருந்தில் இடம்பெற்றுள்ளன.
KSB 2024 சபாவில் உள்ள பத்து (10) மாவட்டங்களில் 1 ஆகஸ்ட் 2024 அன்று லஹாட் டத்தோவில் தொடங்கி, கினாபதாங் மற்றும் ரானாவ் வழியாகச் சென்று கோத்தா கினாபாலுவில் முடிவடைந்தது.அதன் பிறகு, KSB 2024 சரவாக்கில் மிரியில் தொடங்கி குச்சிங்கில் முடிவடையும். இது ஐந்து (5) மாவட்டங்களுக்கு செல்லும்.
இந்நிகழ்வில், திரு.அப்தூல் பின் டாஉட் தொகுதி செயலாளர் (கலாச்சாரம் மற்றும் STI சேவைகள்) அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சகம் (MOSTI),திரு.முகமது ஃபுவாட் பின் ரஹ்மான், தேசிய அறிவியல் மையத்தின் இயக்குநர் மற்றும் டாக்டர்.பாஸ்கல் ஹோஸ்,மலேசியா & வியட்நாம் ஹைபிஸ்கஸ் பெட்ரோலியம் பெர்ஹாட்டின் தலைவர் (கன்றி ஹெட்) மற்றும் டத்தோ எடி அப்துல்லா, மலேசியா & வியட்நாம் ஹைபிஸ்கஸ் பெட்ரோலியம் பெர்ஹாட்டின் சமூகம் மற்றும் அரசாங்கத் தொடர்பு குழுத் தலைவர் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.