இன்று புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் பின் இப்ராஹிம் அவர்களால் 19வது பொது சேவை பிரதானா ஆணைக்குழு விழா Majlis Amanat Perdana Perkhidmatan Awam ke-19 (MAPPA XIX) தொடக்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடந்தேறியது.
தற்பொழுது நடைமுறையில் உள்ள மலேசிய ஊதிய முறை (SSM), 1 டிசம்பர் 2024 முதல் பொது சேவை ஊதிய முறை (SSPA) என மாற்றப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இது விசுவாசமாகவும், நம்பிக்கையுடனும் மற்றும் சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கானது