கோலா காங்சார்: வெள்ளிக்கிழமை அதிகாலை தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் (பிளாஸ்) கிலோமீட்டர் (கிமீ) 259.3 இல் மரத்தூள் ஏற்றிச் சென்ற கனவாகனம் 80 சதவீதம் தீயில் எரிந்து நாசமானது.
இந்தச் சம்பவம் அதிகாலை 5.41 மணியளவில் நடந்ததென மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) பேராக் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மத் கூறினார்.
கோலா கங்சார் மற்றும் மேரு ராயா தீயணைப்பு மீட்பு நிலையங்களின் உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
அதிகாலை நிகழ்ந்த இவ்விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
வடக்கு தெற்கு (பிளாஸ்) நெடுஞ்சாலையில் மற்றொரு தீ விபத்து. மரத்தூள் ஏற்றும் கானவாகனம் தீப்பற்றி எரிந்தது.
