ஜொகூரில் மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (KKM) ஏற்பாட்டில் தென் மண்டல மக்கள் மதானி நிகழ்வு

ஜொகூரில் மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (KKM) ஏற்பாட்டில்  தென் மண்டல மக்கள் மதானி நிகழ்வு

ஜொகூரில் ஸ்குடாயில் உள்ள யுடிஎம் சதுக்கத்தில் (Dataran UTM) நடைபெற்ற 2024க்கான தென் மண்டலத்தின் மக்கள் மதானி நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டனர். மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (KKM) இலவச மருத்துவ முகாமில் இலவச மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் முதல் நாளில் மலேசிய சுகாதார அமைச்சகத்தால் பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படிருந்தன. முதல் நாள் KKM நிகழ்ச்சியில் “( “Nak Cantik, Nak Flawless?”), ஆரோக்கியமான உணவு குறித்த விளக்கங்கள் மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சி ஆகியவை இடம்பெற்றன. “Nak Cantik, Nak Flawless?”, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகுறித்த விளக்கங்கள், பதிவு செய்யப்படாத மருத்துவர்கள், சட்டவிரோத மருத்துவ நடைமுறைகள் மற்றும் மருத்துவ அமைச்சகத்தில் பதிவு செய்யப்படாத மருத்துவ வளாகங்களில் இருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளின் அபாயங்கள் பற்றி நிபுணர் குழு கொண்ட விவாதம் நடைபெற்றது.

தெற்கு உணவு விழா மேடையில், “கிரக ஆரோக்கிய உணவு” என்ற கருப்பொருளில் ஆரோக்கியமான சமையல் செயல்விளக்க கூட்டம் டாக்டர் நார்னசிரா பிந்தி சுஹைரோம் அவர்களால் நடத்தப்பட்டது. உணவு கழிவுகளை குறைக்கவும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்க உதவும் சமையல் முறைகளை அவர் பகிர்ந்துக் கொண்டார்.

பிரதான மேடையில் மிகவும் உற்சாகமான ஏரோபிக் உடற்பயிற்சியுடன் நிகழ்வுகள் தொடங்கின. குடும்பத்துடன் சேர்ந்து செய்யகூடிய இந்த உடற்பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடைமுறைகளில் ஒன்றாக இருக்கும்.