உக்ரைனின் கிழக்கு பகுதியில் இன்று தாக்குதலை நிறுத்தியது ராணுவம்

உக்ரைனின் கிழக்கு பகுதியில் இன்று தாக்குதலை நிறுத்தியது ராணுவம்

1229822

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் ராணுவம் இன்று தனது தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

உக்ரைனில் இருந்து கிரிமியா பிரிந்து தனி நாடாக அறிவிக்கப்பட்ட நிலையில், கிழக்குப் பகுதியையில் உள்ள முக்கிய அலுவலகங்களையும் ரஷ்ய ஆதரவு போராளிகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களிடம் இருந்து அந்த பகுதிகளை மீட்பதற்கு ராணுவம் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. 

சண்டை நடந்து வரும் பகுதியில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து அங்கு விசாரணை நடத்த அனுமதிக்கும் வகையில் ஒரு நாள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியது. இதை ஏற்ற உக்ரைன் ராணுவம் இன்று தாக்குதலை நிறுத்தியுள்ளது. 

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கேட்டுக்கொண்டதையடுத்து இன்று ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.