சுக்மா 2024 – பெண்கள் டென்பின் பந்துவீச்சு போட்டி சரவாக்கின் நூர் ஹசிரா ரம்லி தங்கப் பதக்கம் வென்றார்.

சுக்மா 2024 - பெண்கள் டென்பின் பந்துவீச்சு போட்டி சரவாக்கின்  நூர் ஹசிரா ரம்லி தங்கப் பதக்கம் வென்றார்.

மெகலான்ஸ் சரவாக்கில் நடந்த தனிநபர் பெண்கள் டென்பின் பந்துவீச்சு போட்டி சரவாக்கின் சொந்த வீராங்கனையான நூர் ஹசிரா ரம்லி மொத்தம் 1,261 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
தனது இறுதி சுக்மா போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த சாதனையால் நிம்மதி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்த தங்கத்தை எனது பயிற்சியாளர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட எனது ஆதரவாளர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். எப்போதும் என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கானது இப்பதக்கம்.

இது எனது இறுதி வருட பங்கேற்பு.இதில் பதக்கம் வெல்வதே எனது குறிக்கோள்.இதைத் தொடர்ந்து எனது சக வீரர்களை ஆதரிப்பேன்.மேலும் எனது சிறந்ததை வழங்குவேன்” என்று பதக்க விழாவிற்குப் பிறகு ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர் கூறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 1,254 புள்ளிகளுடன் சிலாங்கூரைச் சேர்ந்த அதானியா முகமட் ரெட்ஸ்வான் இரண்டாவது இடத்தையும், 1,239 புள்ளிகளுடன் விலாயா பெர்செகுதுவானை சேர்ந்த ஹைஃபா ஹஸ்லான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.