அதிக ஒவிய கண்காட்சியில் பங்குபெற்ற ஆடிசம் குழந்தை : மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் ராஜேந்திர வர்மா

அதிக ஒவிய கண்காட்சியில் பங்குபெற்ற ஆடிசம் குழந்தை : மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் ராஜேந்திர வர்மா

அதிக ஒவிய கண்காட்சியில் பங்குபெற்ற ஆடிசம் குழந்தை என்கிற பெருமைமிகு சாதனையை நிகழ்த்தியுள்ளார் 10 வயது நிரம்பிய ராஜேந்திர வர்மா. திரு மோகனன் பெருமாள் திருமதி ராஜேஸ்வரி பரமசிவம் இணையின் ஒரே மகனான ராஜேந்திர வர்மாவின் இந்த சாதனையை அங்கீகரித்து மலேசிய சாதனை புத்தகம் 14/08/2024 சான்றிதழை வழங்கியது.

குணப்படுத்த முடியாத ஆடிசம் குறைபாடு பற்றிய விழிப்புணர்வு சமீப காலங்களில் பொது மக்களிடமும் அத்தகைய பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களிடத்திலும் அதிகரித்து வருகிறது. அத்தகைய பிள்ளைகளும் சராசரி வாழ்க்கை வாழ ஏதுவாக அவர்களை வளர்தெடுக்கும் முயற்சியில் பெற்றோர்கள் பல முயற்சி எடுத்து வருகிறார்கள். ஆடிசம் குழந்தைகள் ஓதேனும் ஒரு கலையில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களை சீர்படுத்தி சிறப்பாக வளர்த்தெடுப்பதுடன் அவர்களுக்கு வாழ்வில் ஒரு அங்கீகாரத்தையும் ஏற்படுத்தி கொடுக்க முடியும் என ஆடிசம் குழந்தைகளின் பெற்றோர்கள நிரூபித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ராஜேந்திர வர்மாவின் பெற்றோர்களான மோகனன் – ராஜேஸ்வரி இணை, ஓவியம் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் ஆகிய கலைகளில் அவரது திறமையை ஊக்குவித்து வளர்த்து வருகிறார்கள். அவரும் தனது திறமையின் மூலம் அழகான படைப்புகளை படைத்து வருகிறார். அவரது படைப்புகள் ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்று வருகின்றன. மேலும் புதிதாக வெளிவரும் புத்தகங்களுக்கு அட்டை படமாகவும் அவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

மலேசிய சாதனை புத்தகம் அவரது இந்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதத்தில் ராஜேந்திர வர்மாவை சாதனையாளராக அறிவித்து அங்கீகரித்துள்ளது. அதிக ஓவிய கண்காட்சியில் பங்கெடுத்த ஆடிசம் குழந்தை என்கிற அங்கீகாரத்தை 14/08/2024 அன்று மலேசிய சாதனை புத்தகம் வழங்கியது. 6 ஓவியக் கண்காட்சியில் ராஜேந்திர வர்மா இதுவரை பங்கெடுத்துள்ளார். இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா 14/08/2024 அன்று கோலாலம்பூரில் உள்ள ஸ்டார் பேங்குவட் அரங்கில் நடபெற்றது.

MITRA தலைவரும், பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு P.பிராபகரன் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்று ராஜேந்திர வர்மாவின் இந்த சாதனையை வாழ்த்தி பேசினார். மலேசிய சாதனை புத்தகப் பிரநிதிகளும் மற்றும் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராஜேந்திர வர்மாவுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

#RajendrraVharma
#MalaysiaBookOfRecords
#PPrabakaran
#Entamizh