PIO நாள் 2024, 15வது சர்வதேச GOPIO மாநாடு மற்றும் PIO ஆராய்ச்சி இதழ் – அதிகாரப்பூர்வ துவக்க விழா

PIO நாள் 2024, 15வது சர்வதேச GOPIO மாநாடு மற்றும் PIO ஆராய்ச்சி இதழ் – அதிகாரப்பூர்வ துவக்க விழா

PIO நாள் 2024, 15வது சர்வதேச GOPIO மாநாடு மற்றும் PIO ஆராய்ச்சி இதழ் – அதிகாரப்பூர்வ துவக்க விழா மற்றும் பத்திரைக்கையாளர் சந்திப்பு 14 ஆகஸ்ட் 2024 அன்று கோலாலம்பூரில் செராஸில் உள்ள சென்பகா அறை, இண்டர்நேஷனல் யூத் செண்டரில் பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மலேசியாவிற்கான இந்திய தூதர் மாண்புமிகு B.N.ரெட்டி கலந்து கொண்டார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்….

PIO நாள் 2024, 15வது சர்வதேச GOPIO மாநாடு மற்றும் PIO ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ துவக்கத்தை உலகளாவிய இந்திய வம்சாவளி மக்கள் இயக்கம்(GOPIO) அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. மலேசியா மற்றும் உலகம் முழுவதும் வாழும் இந்திய வம்சாவளி மக்கள்(PIO) சமூகத்தின் செழிப்பான கலாச்சார பாரம்பரியம் மற்றும் தீவிரமான பங்களிப்புகளை இந்த நிகழ்வுகள் முன்னிலைபடுத்தும்.

PIO நாள் 2024
PIO சமூகத்தின் மூதாதையர்களின் தியாகங்கள், சவால்கள் மற்றும் சாதனைகளை பெருமைபடுத்தும் விதத்தில் PIO நாள் 2024 ஒரு தேசிய விழாவாக கொண்டாடப்படும். இந்திய வம்சாவளி மக்களின் வரலாற்று பயணம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை நினைவுகூற அனைத்து தரப்பு மக்களும் இந்த நிகழ்வில் ஒன்றாக பங்கு பெறுவர்.

மலேசியாவின் முதல் PIO நாள் கடந்த 02 ஜூன் 2023 அன்று பிரிக்பீல்டில் உள்ள லிட்டில் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது. அப்போதைய மனிதவள அமைச்சர் மதிப்பிற்குரிய V.சிவகுமார் மற்றும் அப்போதைய இந்திய அரசின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மாண்புமிகு V. முரளீதரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

PIO சர்வதேச விழா
செப்டம்பர் 14 முதல் 16 ஆம் தேதி வரை மலேசியா கோலாலம்பூரில் பிரிக்பீல்டில் லிட்டில் இந்தியாவில் உள்ள விவேகானந்தா பள்ளி மற்றும் ஆசிரமத்தில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை PIO சர்வதேச விழா நடைபெற இருக்கிறது.

மூன்று நாட்கள் விமர்சையாக நடைபெற இருக்கும் இந்த PIO சர்வதேச விழாவில் பல்வேறு கலாச்சார கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் நடைபெற உள்ளன.

15வது சர்வதேச GOPIO மாநாடு
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிரிக்பீல்ட் ஆசியா கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் PIO வர்த்தக தலைவர்கள் PIO சமூகம் உலக அளவில் பொருளாதார ரீதியில் தடம் பதிப்பதை மேம்படுத்த உத்திகள் குறித்து விவாதிப்பர்.

PIO ஆராய்ச்சி இதழ் வெளியீடு
கோலாலம்பூரில் செராஸில் உள்ள இண்டர்நேஷனல் யூத் செண்டரில் 14 ஆகஸ்ட் 2024 அன்று இந்த வெளியீடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

PIO ஆராய்ச்சி இதழ் உலகளாவிய PIO சமூகத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பங்களிப்பு குறித்த தகவல் களஞ்சியமாக அமையும். ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் PIO புலம்பெயர்ந்தவர்கள் குறித்த ஆர்வம் கொண்டவர்களுக்கு முக்கிய தகவல் குறிப்பேடாக இது அமையும்.

Gopio International
India in Malaysia (High Commission of India, Kuala Lumpur)

#GOPIO
#15THGOPIOINTERNATIONALCONVENTION
#PIODay2024
#PIOJournal
#PressConference
#OfficialLaunching
#Entamizh