ரேபிட் கே.எல்லின் டிமாண்ட் ரெஸ்பான்சிவ் டிரான்சிட் (Demand Responsive Transit) மகிழுந்து சேவையானது கிள்ளான் பள்ளத்தாக்கு பயணிகளிடையே பிரபலமடைந்து வருகிறது. அவர்கள் பிரபலமான நகர்ப்புறப் பகுதிக்களுக்கு விரைவாகவும் மலிவாகவும் பயணம் செய்ய இந்த போக்குவரத்துக்கு பேருதவியாக உள்ளது.
DRT Apps மூலம் இச்சேவையை பயணிகள் ரிங்கிட் மலேசிய 1 வெள்ளிக்கு பயன்படுத்தலாம். தற்பொழுது 9 மகிழுந்துகள் சேவையில் உள்ள நிலையில் பிரசரன மலேசியா ஜூன் 2025க்குள் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பினாங்கில் தனது டிமாண்ட் ரெஸ்பான்சிவ் டிரான்சிட் (டிஆர்டி) செயல்பாடுகளில் 300 புதிய மகிழுந்துக்களை சேர்க்கும்.