வங்காளதேசத்தில் தற்காலிக ஆட்சி அமைப்பு

வங்காளதேசத்தில் தற்காலிக ஆட்சி அமைப்பு

மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு ராணுவ ஆராட்சி அமைக்கப்பட்டது. ஜனாதிபதி ஷஹாபுதீன் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தற்காலிக அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனாவை கைது செய்து வங்காளதேசத்திற்கு அனுப்பிவைக்குமாறு வங்காளதேச வழக்கறிஞர் சங்கம் இந்தியாவிடம் விண்ணப்பித்துள்ளது.

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வங்காளதேச தேசிய கட்சியின் தலைவர் கலீதா ஜியா விடுதலை செய்ய்பட்டார். போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.