Cyber Digital Services, Defense & Security Asia (CyberDSA) 2024 துவக்க விழாவில் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அவர்கள் டிஜிட்டல் அமைச்சகத்தின் முக்கிய குறிக்கோள் டிஜிட்டல் நம்பிக்கையை மேம்படுத்துவது என குறிப்பிட்டார். டிஜிட்டல் நம்பிக்கையை உருவாக்குவதும் பராமரிப்பதும் வெறும் தொழில்நுட்பத்திற்கு அப்பாற்பட்டது; இது வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள், தனியுரிமைச் சட்டங்களைக் கடைப்பிடிப்பது மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கோருகிறது என கூறினார். பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலை வளர்ப்பதால் இது பயனீட்டாளர் நம்பிக்கையை அதிகரிக்கும். நம்பகமான டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை இயக்கும் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அமைச்சகம் அதிகவனத்துடன் செயல்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
CyberDSA 2024 டிஜிட்டல் பொருளாதாரங்களைப் பாதுகாக்கவும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும். அதே வேளையில் இணையப் பாதுகாப்பு குறித்த சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் இதர தகவல்களை வழங்குவதற்காகவும் தொடங்கப்பட்ட மாநாடாகும்.
இம்மாநாடு, இறுதிப் பயனர்களிடையே இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்துவதற்கு அமைச்சகத்திற்கு மதிப்புமிக்க தளமாகவும் செயல்படுகிறது. இந்த மாநாடு, டிஜிட்டல் அமைச்சகம், MyDIGITAL கார்ப்பரேஷன் மற்றும் சைபர் செக்யூரிட்டி மலேசியா ஆகியவை இணைந்து தொடங்கவிருக்கும் ‘சைபர்சேஃப் ஃபார் ரக்யாட்’ திட்டத்திற்கு ஆதரவாக இருக்குமென தெரிவித்தார். இந்த முன்முயற்சியானது பொதுமக்களுக்கு ஐந்து இணையப் பாதுகாப்புத் தொகுதிகளைக் கொண்ட சுய-கற்றல் முறையை வழங்கும்.
#CyberDSA
#Entamizh