சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரப்பர் மற்றும் உணவு துறையை தவிர தனியார் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இடம்பெறும் : மாரிஸ்

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரப்பர் மற்றும் உணவு துறையை தவிர தனியார் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இடம்பெறும் : மாரிஸ்

தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் சங்கியம்பொங்சா அவர்களை மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 07/08/2024 அன்று சந்தித்தார்.

3 ஆகஸ்ட் 2024 அன்று தாய்லாந்தின் சுங்கை கோலோக் மற்றும் கிளாந்தான், ரண்டாவ் பன்ஜாங் ஆகிய இடங்களுக்கு தாய்லாந்து பிரதமர், மாண்புமிகு ஸ்ரேத்தா தவிசினுடன் பிரதமர் பணி நிமித்தமாகப் பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தின் பொருட்டு இருவரும் கலந்துரையாடல் நடத்தியதாக பிரதமர் தன் சமுக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

விரைவில் அமைய இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரப்பர் மற்றும் உணவு துறையை தவிர தனியார் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இடம்பெறும் என
திரு. மாரிஸ் குறிப்பிட்டார். இதேபோல் கிளாந்தான் மாநிலமும் சுங்கை கோலோக் பகுதிகளில் தங்களது வியாபார வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.