வங்காள தேசத்தில் பிரதமர் ராஜினாமா : ராணுவ ஆட்சி அமல்

வங்காள தேசத்தில் பிரதமர் ராஜினாமா : ராணுவ ஆட்சி அமல்

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க இருப்பதாக அரசு அறிவித்ததை தொடர்ந்து , நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. இதுவரை நடந்த வன்முறைகளில் 300 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் , வன்முறை வெடித்து கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டன. இதனால் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் பெற்றுள்ளார். தற்போது ராணுவத்திடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது.