என் தமிழ்

மலேசிய இந்து சங்கம் தாமான் மேடான் வட்டார பேரவையின் 46-ஆவது திருமுறை ஓதும் விழா

கடந்த (28/7/2024) திகதி ஞாயிற்றுக்கிழமையன்று, மலேசிய இந்து சங்கம் தாமான் மேடான் வட்டார பேரவையின் 46-ஆவது திருமுறை ஓதும் விழா சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குப்பெற்றனர். திருமுறை ஓதுதல் (ஆண்/பெண்/குழு), பேச்சுப் போட்டி, பதிகப் பாராயணப் போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி மற்றும் கோலப் போட்டி ஆகியவை நடைப்பெற்றது. மலேசிய இந்து சிலாங்கூர் மாநிலப் பேரவையின் உதவித் தலைவர் ஸ்ரீமதி பிரேமலதா அவர்கள் நிறைவு விழாவில் கலந்து சிறப்பித்தார்.
மேலும் மாநிலப் பேரவையின் துணைத் தலைவர் தொண்டர்மணி சரஸ்வதி வேலு, சமயப் பிரிவு பொறுப்பாளர் தேவார நாயகம் Lt. Col. விக்னேஷ்வரன் முனிக்கண்ணன், கல்வி, தொலைத் தொடர்புப் பிரிவு பொறுப்பாளர் திரு சந்துரு கணேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழா சிறக்க செவ்வனே பணியாற்றிய தலைமைப் பொறுப்பாளர் திரு அன்பரசன் அவர்களுக்கும், மற்றும் நடுவர் பெருமக்களுக்கும், தங்களது வருகையின் வழி பேராதரவு நல்கிய இதர வட்டாரப் பேரவைகளின் தலைவர்களுக்கும், அவர்தம் செயலவை உறுப்பினர்களுக்கும் மாநிலப் பேரவையின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்

#EntamizhBakthi
#Entamizh

Scroll to Top