வங்காளதேசத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேளைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டங்கள் காரணமாக கடந்த 2018 -ம் ஆண்டு இது ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இந்த நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்ட நிலையில் கலவரங்கள் வெடித்து 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை காரணமாக 30 சதவீதம் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த நிலையில், மாணவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நேற்று தொடங்கி, பேரணிகள் நடத்தினர். வன்முறை ஏற்பட்ட நிலையில் போலீசார் உள்பட 91 பேர் உயிரிழந்தனர்.
Previous Post: மலேசியாவிற்கு முதல் பதக்கம் : ஆண்கள் இரட்டையர் பேட்மிட்டன்
Next Post: பாலஸ்தீன விடுதலை பேரணி : பிரதமர் உரை