என் தமிழ்

பாலஸ்தீன விடுதலை பேரணி : பிரதமர் உரை

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 04/08/2024 அன்று புக்கிட் ஜாலில் ஆக்ஸியாடா அரேனா அரங்கில் நடைபெற்ற “பாலஸ்தீன விடுதலை பேரணி” நில் மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பாலஸ்தீனம் மற்றும் காஜா குறித்து தொடர்ந்து பேசுவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் தனது உரையில் வலியுறுத்தினார்.

இஸ்ரேலின் அடக்குமுறை மற்றும் பிடியில் இருந்து பாலஸ்தீனம் மற்றும் காஜா மக்களை விடுவிக்கும் போராட்டத்தில் மலேசியாவின் நிலைப்பாடு தெளிவாகவும் ஒரே சீராகவும் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்த பேரணியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பாலஸ்தீனத்திற்கு தங்களின் ஆதரவினை வெளிப்படுத்தினர்.

Scroll to Top