கடந்த வெள்ளிக்கிழமை அன்று மைக்ரோசாப்ட் க்ரௌட்ஸ்ட்ரைக் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுதும் பல்வேறு நிறிவனங்களின் சேவைகள் முடங்கின. மலேசியாவிலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளின் சேவைகள் முடங்கியதால் பயனாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானர். இது குறித்து விளக்கமளிக்க 24/07/2024 அன்று இலக்கவியல் அமைச்சர் மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சேவை முடக்கம் சைபர் தாக்குதலோ அல்லது வைரஸ் தாக்குதலோ அல்ல என அமைச்சர் கூறினார்.
இந்த சேவை முடக்கம் மைக்ரோசாப்ட் மென்பொருளில் ஒரு அப்டேட் செய்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் ஏற்பட்ட முடக்கமே அன்றி வேறு வெளி நபர்களின் சைபர் அட்டாக்கால் ஏற்படவில்லை. மேலும் இது உலகம் முழுதும் ஏற்பட்ட பிரச்சனை என்பதையும் மலேசியாவில் மட்டும் இது ஏற்படவில்லை என்கிற விளக்கத்தையும் அமைச்சர் தெரிவித்தார்.
இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு தங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துமாறு மைக்ரோசாப்ட் மற்றும் க்ரௌட்ஸ்ட்ரைக் நிறுவநங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்