இணையப் பகடிவதை சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் கோபிந்த் சிங்

இணையப் பகடிவதை சட்டத்தில் திருத்தம் - அமைச்சர் கோபிந்த் சிங்

இணையப் பகடிவதை தொடர்பான சட்டத்தில் திருத்தம் உட்பட சில மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவில் அறிவிக்கவிருக்கிறது என்பதை 24/07/2024 பத்திரிக்கையாளர் சந்திப்பில் இலக்கவியல் அமைச்சர் மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இணையப் பகடிவதையைக் கையாளும் சிறப்புச் செயற்குழு அதன் தொடர்பில் பேச்சு நடத்தியிருப்பதோடு, அவ்விவகாரத்தை அடையாளம் கண்டும் உள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

“நான்கு அமைச்சுக்கிடையில் செயற்குழுவை அமைக்கப்பட்டு, சில கலந்துரையாடல்களை நடைபெற்றுள்ளது. அவை அனைத்தும் சுமூகமாகவே நடைபெற்றன,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அந்த செயற்குழுவில் தொடர்பு அமைச்சு, உள்துறை அமைச்சு, இலக்கவியல் அமைச்சு மற்றும் பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான பிரிவு ஆகியவை இடம்பெற்றுள்ளன.அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள இணையப் பகடிவதையைத் தடுக்கும் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்னர், இந்த செயற்குழு ஒட்டுமொத்தமாக அதன் தொடர்பில் ஆராயும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இணைய பகடிவதைக் காரணமாக சமீபத்தில் உரிரிழந்த ஈஷா என்ற இளம்பெண் விவகாரத்தில், அதற்கு காரணமான பி.ஷாலினிக்கு அதிகபட்டம் 100 ரிங்கிட் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.