MH17 விமானம் விபத்து : ஐநா கருத்து

MH17 விமானம் விபத்து : ஐநா கருத்து

images (2)

கீவ்: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி கடந்த 17ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நடுவானில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ரஷ்யா-உக்ரைன் எல்லையில் நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதலில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாயினர். 

இது குறித்து ஐநாவின் மனித உரிமைகள் கமிஷன் தலைவர் நவநீதம் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச சட்டத்தை மீறியதற்காக கொடுக்கப்பட்ட பெரும் விலைதான் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட கொடூரம். இவ்வாறு சர்வதேச சட்டத்தை மீறி போர் குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.