பல வருடங்களாக மலேசிய தமிழ் சினிமா துறையில் நடிகராகவும் குறும்பட இயக்குநராகவும் வலம் வந்த கோபால் ராமன் முதல் முறையாக ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார். என் தமிழ் வண்ணங்களின் வாழ்த்துக்கள். கோபால் ராமன் தயாரித்து இயக்க இருக்கும் இந்த புதிய திரைப்படத்தின் பூஜை 28/04/2024 நடைபெற்றது. கோலாலம்பூர், பினாங்கு, கெடா மற்றும் சிங்கப்பூரை சார்ந்த நடிகர்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தில் பரமபதம் மற்றும் அஃறிணை திரைப்படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். கோபால் ராமனின் இந்த புதிய திரைப்படம் ஒரு திகில் திரைப்படம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
#GopalRaman
#Bira
#MalaysiaTamilMovie
#EntamizhVannangal













