மீண்டும் தலைவர் ஆனார் நிவாஸ் ராகவன். கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் 2024-2026 தேர்தல் 28 ஏப்ரல் 2024 அன்று நடைபெற்றது. கடும் போட்டி நிலவிய நிலையில் தற்போதைய தலைவர் திரு. நிவாஸ் ராகவன் தனது தலைவர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். எதிர் அணியை சார்ந்த செல்வராஜா பொருளாளர் பதவிக்கும், பன்னீர் செல்வம் உதவித் தலைவர் பதவிக்கும் மற்றும் பிரபாகரன் துணைத் தலைவர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவரும் ஒற்றுமையாக உறுப்பினர்கள் மற்றும் இந்திய வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களின் நலனுக்காக பாடுபடுவார்கள் என தலைவர் நிவாஸ் கூட்டாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். அனைவருக்கும் என் தமிழ் ஊடகத்தின் வாழ்த்துக்கள்.
#KLSICCI
#EntamizhVannangal
#NivaasRagavan
Nivaas Ragavan becomes KLSICCI President for one more term
